அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ.பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ.பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வில் அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ.பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மடை கிராமத்தில் அமிர்தா வித்யாலயம் சி.பி.எஸ்.இ.பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சி.பி.எஸ்.இ.. அமிர்தா வித்யாலயா பள்ளியில் இந்த ஆண்டு 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இந்த பள்ளி சாதனை படைத்துள்ளது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இந்த பள்ளியில் படிக்கும் விசுவர்த கோபாலன் என்ற மாணவன் 488 மதிப்பெண் பெற்று உள்ளார். ஹரிஹரிஷ் 483 மதிப்பெண்ணும், போதனாகுருதேவி 477 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேபோல் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் இந்த பள்ளியில் படிக்கும் கவுதம் என்ற மாணவன் 475 மதிப்பெண்ணும், மோகனசுஜய் 445 மதிப்பெண்ணும், சிருஷ்டி கணேஷ் 442 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதை தொடர்ந்து 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி, முதல்வர் ஹரிணி, மற்றும் அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


Related Tags :
Next Story