கார் கவிழ்ந்து விபத்தில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் காயம்


கார் கவிழ்ந்து விபத்தில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் காயம்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார் கவிழ்ந்து விபத்தில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் காயம் அடைந்தாா்

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே எம்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(வயது 51), இவர் வடமாவளி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பத்தூர் ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் முருகானந்தம் திருப்பத்தூரில் இருந்து திருக்கோஷ்டியூர் செல்லும் வழியில் காட்டாம்பூர் தேசியநெடுஞ்சாலை விலக்கு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் முருகானந்தம் காயம் அடைந்தார். பின்னர் அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்்க்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story