பிரசவத்தின் போது இறந்த பெண்ணிண் குடும்பத்திற்கு அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. ஆறுதல்


பிரசவத்தின் போது இறந்த பெண்ணிண் குடும்பத்திற்கு அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. ஆறுதல்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரசவத்தின் போது இறந்த பெண்ணிண் குடும்பத்திற்கு அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. ஆறுதல்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த குறிஞ்சிமலருக்கு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இரவு பிரசவம் நடைபெற்று பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிரசவித்த பெண்ணுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த வால்பாறை அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ,. ஆஸ்பத்திரியில் குறிஞ்சிமலருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த கேட்டு அறிந்தார். இதையடுத்து இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவருடன் வால்பாறை அ.தி.மு.க நகரசெயலாளர் மயில் கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story