அரசு பள்ளிக்குள் புகுந்த8 அடி நீள பாம்பு பிடிபட்டது
அரசு பள்ளிக்குள் புகுந்த8 அடி நீள பாம்பு பிடிபட்டது.
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது 1-ம் வகுப்பு அறையில் மாணவன் ஒருவன் எதிர்பாராதவிதமாக அண்ணார்ந்து பார்த்தபோது பாம்பு ஒன்று ஓட்டிற்குள் தலையை நீட்டிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியில் பாம்பு பாம்பு என அலறினான். இதனையடுத்து பள்ளி அறைக்கு வந்த ஆசிரியர் இதுகுறித்து உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.