வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது


வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது
x

சீர்காழி அருகே வீட்டுக்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிபட்டது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே பச்சை பெருமாநல்லூர் ஊராட்சி திருநீலகண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70). ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர். இவர் நேற்று இரவு தூங்குவதற்காக படுக்கை அறைக்குள் சென்றபோது பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, பாம்பு பிடிப்பதில் வல்லவரான சீர்காழியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாண்டியன், சுந்தரம் வீட்டின் படுக்கை அறையில் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பு, சீர்காழி புறவழிச்சாலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உயிருடன் விடப்பட்டது.

1 More update

Next Story