மிளகாய் சாகுபடியாகும் நிலங்களை பார்வையிட வந்த அமெரிக்க பெண்


மிளகாய் சாகுபடியாகும் நிலங்களை பார்வையிட வந்த அமெரிக்க பெண்
x

கமுதி பகுதியில் இருந்து தங்கள் நாட்டுக்கு மிளகாய் ஏற்றுமதியாவதால், அதன் சாகுபடி நிலங்களை பார்வையிட வந்த அமெரிக்க பெண், குடியரசு தினத்தையொட்டி நமது தேசிய கொடியை அசைத்து உற்சாகம் அடைந்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி பகுதியில் இருந்து தங்கள் நாட்டுக்கு மிளகாய் ஏற்றுமதியாவதால், அதன் சாகுபடி நிலங்களை பார்வையிட வந்த அமெரிக்க பெண், குடியரசு தினத்தையொட்டி நமது தேசிய கொடியை அசைத்து உற்சாகம் அடைந்தார்.

இயற்கை விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர். இவர், இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, வண்ண பூச்சி ஒட்டிகளை பயன்படுத்தி வருகிறார்.

மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் இவர் கலெக்டரிடம் இதற்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதும் பெற்றுள்ளார்.

ஆய்வு பணி

மேலும் இவரது வயலில் விளையும், சம்பா மிளகாய்களை தொடர்ந்து 5 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த ஆண்டு இயற்கை விவசாயம் மூலம் இவரது தோட்டத்தில் விளைந்து வரும் சம்பா மிளகாயை, கொள்முதல் செய்வதற்கு முன்பாக அமெரிக்க நாட்டில் இருந்து வந்த இளம்பெண்ணும், அந்நாட்டைச் சேர்ந்த கெவின் என்பவரும், கோரைப்பள்ளம் கிராமத்தில் ராமர் தோட்டத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் இருவரும் அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தின் சார்பில் வேளாண் நிலங்களை பார்வையிட வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு விவசாயி ராமர் தலைமையில் கிராமத்து மக்கள் குலவையிட்டு, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த ஆண்டு 200 டன் சம்பா மிளகாய், இப்பகுதியில் உள்ள 20 கிராமங்களில் இருந்து, கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பாக்குவெட்டி என்ற கிராமத்திலும் உருவாட்டி என்பவரின் மிளகாய் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கமுதி விவசாய கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகாயை ரகம் வாரியாக தரம்பிரிக்கப்பட்டு, சுத்தம் செய்து, பாதுகாத்து வைக்கப்படும் குடோனை பார்வையிட்டனர்.

தேசிய கொடி

இந்த பணியின் போது, கூட்டுறவு விற்பனை சங்க பொது மேலாளர் போஸ், இயற்கை விவசாயி ராமர், தனியார் நிறுவன தலைமை இயக்குதல் அதிகாரி சவுரப், கொள்முதல் மேலாளர் சஞ்சய், ஜோசப்ராஜ், கள ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி அமெரிக்க பெண், நமது தேசிய கொடிைய உற்சாகத்துடன் அசைத்து மகிழ்ந்தார். இதை பார்த்த கிராம மக்கள் கரகோஷம் எழுப்பினர்.


Related Tags :
Next Story