புழல் அருகே ஆந்திர மாநில பஸ் தீப்பிடித்து எரிந்தது


புழல் அருகே ஆந்திர மாநில பஸ் தீப்பிடித்து எரிந்தது
x
சென்னை

செங்குன்றம்,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று மாதவரம் பஸ் நிலையத்துக்கு நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. புழல் சைக்கிள் ஷாப் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது.

இதை பார்த்த பஸ் டிரைவர் உமர், பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கிவிட்டனர். அதற்குள் காற்றின் வேகத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம், செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story