ஒரு ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி
ஒரு ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் வட்டத்திற்கு உட்பட்ட நந்திவேடுதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது 80). கடந்த 1995-ம் ஆண்டு தமிழக அரசு மூலம் கோவிந்தப்பா மற்றும் அவரது அண்ணன் மனைவி ஆகியோரின் பெயரில் பட்டா வழங்கி 1.15 ஏக்கர் நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களது பெயரில் உள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாகவும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கோவிந்தப்பா ஊர் மக்களுடன் வந்து ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளார்.
Related Tags :
Next Story