மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி


மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
x

தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி நடைபெற்றது.

திருச்சி

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க விடப்பட்டுள்ள தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். போராட்டத்திற்கு தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். பின்னர் போராட்டத்திற்கு வந்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதனிடம் புகார் மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர். அந்த மனுவில், " திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியினை தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக செயல்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாலைகளில் பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகைக்கு எந்த வித ரசீதும் வழங்கப்படவில்லை. இதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்து வருகிறது. எனவே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுவரும் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்த பணியினை முறையாக மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story