பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.4¾ லட்சம் பறிக்க முயற்சி
மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.4¾ லட்சம் பறிக்க முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பனைக்குளம்.
மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.4¾ லட்சம் பறிக்க முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.4¾ லட்சம் பறிக்க முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலை சமத்துவபுரம் எதிரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த விற்பனை நிலையத்தில் வசூலாகும் பணத்தை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம். அதன்படி பெட்ரோல் நிலையத்தில் வசூலான தொகை ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்தை தனிப்பையில் எடுத்துக்கொண்டு ராமநாதபுரத்தில் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தை சேர்ந்த ஊழியர் புவனேஸ்வரர் (வயது39) என்பவர் எடுத்துக்கொண்டு வளையல்வாடி என்ற ஊரின் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், திடீரென புவனேஸ்வரர் அருகே வந்து கையில் இருந்த பண பையை பறிக்க முயன்றனர்.
2 பேர் கைது
அப்போது புவனேஸ்வரர் சத்தம் போட்டவுடன் இருவரும் தப்பித்து சென்று விட்டனர்.
இது குறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (23), விக்ரம் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.