குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி


குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
x

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

குவாரி மீது நடவடிக்கை

கூட்டத்தில், வெள்ளைகவுண்டன்பட்டி, வாசுகுமரன்பட்டி, கே.பிச்சம்பட்டி பகுதியை ேசர்ந்த மனு கொடுத்தனர். அந்த மனுவில், மேற்கண்ட கிராமப்பகுதியில் கிரானைட் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வெடி வைக்கும்போது, வீடுகளில் அதிக அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் அவர்கள் கொடுத்த மற்றொரு மனுவில், இந்த பகுதியில் இயங்கி வரும் மற்றொரு கிரானைட் குவாரிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பே உரிமம் முடிந்து விட்டது. ஆனால் இன்றும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மணல் குவாரி அனுமதி ரத்து...

காவிரி ஆற்று பாதுகாப்பு இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் மல்லம்பாளையம், நன்னியூர் பகுதியில் புதிய மணல் குவாரி அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் அந்த புதிய மணல் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

தோகைமலை அருகே கழுகூர் பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள நிலமற்ற குடியிருப்பு வாசிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் வீடு கட்டி கொள்வதற்கு முறையான வரன்முறை அளந்து கொடுக்காமல் உள்ளது. எனவே வரன்முறையை முறையாக அளந்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால் போலீசார் நுழைவு வாயில் முன்பு நின்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை சோதனை செய்து உள்ளே அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளி வாகனத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் வந்தார். அப்போது திடீரென அவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட அங்கிருந்த போலீசார் மாற்றுத்திறனாளி வாலிபரை தண்ணீர் ஊற்றி அசுவாசப்படுத்தினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தரகம்பட்டி அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவரும், மாற்றுத்திறனாளியான செந்தில் (வயது 40) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த வேலையும் கிடைக்கவில்லை. கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தும், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படவில்லை, இதனால் மனமுடைந் அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும், இது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடாது என போலீசார் அறிவுைர கூறி அவரை அங்கிருந்திருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story