பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளிக்க முயற்சி
பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளிக்க முயற்சி
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளிக்க முயன்றார்.
பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது தனது மனைவியுடன் மனு அளிக்க வந்த ஒருவர், தான் பையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தனது உடலில் ஊற்றி கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அலுவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு அருகில் இருந்த கழிவறைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு வந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலச்சந்திரன் வாளியில் இருந்த தண்ணீரை அவரின் மீது ஊற்றினார்.
உயிருக்கு ஆபத்து
தகவல் அறிந்ததும் திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் அருகே மாவூர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (வயது 48) என்பதும், அவரது மனைவி வெண்ணிலா என்பவருடன் மனு அளிக்க வந்ததும் தெரியவந்தது.
அவரது சகோதரர்கள் பூர்வீக சொத்தினை அபகரித்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதும், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும், இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
பரபரப்பு
இதனால் விரக்தியில் பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததும், அங்கு தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கணவன்-மனைவி 2 பேரையும் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொத்தனார் வேலைபார்த்து வரும் இளங்கோவனுக்கு இளவரசன் என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.