போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
x

நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக் குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக் குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிலம் ஆக்கிரமிப்பு

ஜோலார்பேட்டையை அடுத்த காவேரிப்பட்டு ஊமையன் வட்டத்தை சேர்ந்தவர் மதிமாறன். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களுக்கு 1 ஏக்கர் 10 சென்ட் நிலம் உள்ளது. இதனை அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் 17 சென்ட் இடத்தை அபகரித்துள்ளனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் 10 முறை புகார் அளித்தும், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அம்பிகாவிற்கு சொந்தமான நிலத்தை சிலர் டிராக்டர் மூலம் ஏர் உழுது உள்ளனர். அதனை தட்டி கேட்ட அம்பிகாவின் குடும்பத்தினரை ஆபாசமாக பேசி, தாக்க முயன்று உள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அம்பிகாவை தீக்குளிக்க வடாமல் தடுத்து, பெட்ரோல் கேனை பிடுங்கி, அவரை சமாதானப்படுத்தினர்.

மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதன் பேரில் அம்பிகா அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story