வைக்கோல் ஏற்றி வந்த ஆட்டோ தீயில் எரிந்து நாசம்
மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த ஆட்டோ தீயில் எரிந்து நாசமானது.
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் செங்கமுத்து (வயது 47), ஆட்டோ டிரைவர். இவர் லால்குடியில் இருந்து வைக்கோல்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்திற்கு கொண்டு சென்றார். அப்போது அங்குள்ள பழமலையான் கோவில் செல்லும் பாதையில் சென்றபோது ஆட்டோவில் இருந்த வைக்கோல் எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பியில் உரசியது. இதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செங்கமுத்து ஆட்டோவில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.