விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் சக்திகணேஷ்(வயது 20). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களான பாலக்காடு ரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் (18), அர்ஜூனன்(27) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஆத்துப்பொள்ளாச்சியில் உள்ள ஆற்றிக்கு குளிக்க சென்றார். பின்னர் குளித்து விட்டு மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டிருந்தனர். அப்போது குடிநீர் உந்து நிலையம் அருகில் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக மண் சறுக்கி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அக்கம்பக்கத்தினர் அனுப்பி வைத்தனர். இதில் சக்திகணேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.