முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு


தினத்தந்தி 8 Dec 2022 6:45 PM GMT (Updated: 8 Dec 2022 6:45 PM GMT)

தென்காசிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

தென்காசி

தென்காசிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு

தென்காசியில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். இ்ங்கு ரெயில் நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், நேரு, பெரியசாமி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ெதன்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவர் அங்கு நின்ற பொதுமக்களிடம் கை கொடுத்ததுடன் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார். பின்னர் அங்கிருந்து குற்றாலம் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்ற அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஆங்காங்கே கரகாட்டம், குதிரைஆட்டம், பொய்க்கால் ஆட்டம் மற்றும் மேளதாளம் முழங்கவும், குதிரைகள் அணிவகுத்து வந்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனு

பின்னர் அங்கிருந்து விழா நடந்த தென்காசி கணக்கப்பிள்ளைவலசை வேல்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்துக்கு காரில் வந்த முதல்-அமைச்சருக்கு குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆங்காங்கே கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. அந்த பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.

பின்னர் விழா மேடைக்கு வந்த அவர் ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கர் ராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் வெள்ளி செங்கோல் கொடுத்து வரவேற்றனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விழாவில் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் மா.செல்லத்துரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிநாடார், டாக்டர் சதன்திருமலைக்குமார், அப்துல்வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துசெல்வி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் எஸ்.தமிழ்ச்செல்வி போஸ், தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், துணைத்தலைவர் செல்வக்குடி ராஜாமணி,

கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள், வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையாபாண்டியன், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை, புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், துணைத்தலைவர் அந்தோணிசாமி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட இளைஞரணி ஆர்.சரவணன், மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா, தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத்தலைவர் சுப்பையா, சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன்,

தி.மு.க. செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் ஆபத்துக்காத்தான், தலைமைக்கழக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம், அரசு ஒப்பந்ததாரர்கள் கரையாளனூர் சண்முகவேலு, தங்கத்துரை, அண்ணாமலை, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார், கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ், சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன், சிவகிரி நகர செயலாளர் செண்பக விநாயகம், ராயகிரி நகர செயலாளர் குருசாமி, தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், துணை செயலாளர்கள் கனிமொழி, மனோகரன்,

விவசாய அணி மாநில இணைச்செயலாளர் அப்துல்காதர், மாநில துணை செயலாளர் கு.செல்லப்பா, நிர்வாகிகள் பாப்புலர் செல்லத்துரை, தென்காசி ராமையா என்ற துரை, குறும்பலாப்பேரி இளங்கோ, கீழப்பாவூர் பொன்அறிவழகன், முத்துக்குமார், சமுத்திரபாண்டியன், இடைகால் மோகன், பள்ளக்கால் முருகன், சரஸ்வதி நாராயணன், அடைச்சாணி முத்துசாமி, கொம்பையா, ஆழ்வார்குறிச்சி கோதர்ஷா, பொட்டல்புதூர் விசுவாசேக், நாலாங்கட்டளை முத்துக்குட்டி, தென்காசி மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை முன்னாள் தலைவர் ஷமீம் இப்ராஹிம், பானுஷமீம், யூனியன் கவுன்சிலர் பாலசரஸ்வதி, மாவட்ட பிரதிநிதி ராஜாமணி, மேலக்கலங்கல் ராம்குமார், உதயநிதி மன்ற ஒன்றிய தலைவர் அருணா பாண்டியன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன்,

அண்ணாமலைபுதூர் கிளைச்செயலாளர் முருகையா, குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்யராஜ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம், இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், துணை தலைவர் முத்தையா, வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத்தலைவர் லைலாபானு, பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், துணைத்தலைவர் நாகலட்சுமி, மேலகரம் பேரூராட்சி தலைவி வேணி, துணைத்தலைவர் ஜீவானந்தம், சேர்வைக்காரன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன், பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி, சிவகிரி துணை அமைப்பாளர் சக்திவேல், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற செயலாளர் புல்லட் கணேசன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் விவேகானந்தன், பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, காங்கிரஸ் மாநில செயலாளர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தரையா, தென்காசி மாவட்ட காங்கிரஸ் அமைப்பு செயலாளர் அண்ணாமலை, ஓணம் பீடி உரிமையாளர் பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் இராம.உதயசூரியன்,

ஒன்றிய கவுன்சிலர் பால சரஸ்வதி, தொழில் அதிபர் மணிகண்டன், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் ஜெபராஜன், பாப்பாக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பஞ்சு அருணாசலம், கிளை செயலாளர்கள் ஆலடிப்பட்டி ரஞ்சித், வெண்ணிலிங்கபுரம் சுப்பையா பாண்டியன், செல்லப்பாண்டியன், காடுவெட்டி ஜேக்கப்பாண்டி, கடங்கனேரி வடிவேலு, ரெட்டியார்பட்டி மாஞ்சோலை துரை, மகேந்திரன், அந்தோணிசாமி, சிங்கம்பாறை டென்னிஸ், சிவகாமியாபுரம் விமல் சுந்தர்ராஜ், காசியாபுரம் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்த விழாவையொட்டி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் ஆகியோர் தலைமையில் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story