திருச்சியில் விவசாயிகளை வியக்க வைத்த கண்காட்சி


திருச்சியில் விவசாயிகளை வியக்க வைத்த கண்காட்சி
x

திருச்சியில் விவசாயிகளை வியக்க வைத்த கண்காட்சி நடக்கிறது.

திருச்சி

வேளாண்மை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் அச்சாணி போன்றது. இந்தியாவை பொறுத்த வரை அது இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.

வேளாண்மை

வேளாண்மை உரிய முறையில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் நாட்டின் ஆணி வேரையே அழித்துவிடும். வேளாண்மை உணவுக்கு மட்டும் இல்லாமல் அதைச்சார்ந்த தொழிலுக்கும் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக தொழில்கள் முன்னேற்றம் பெற வேளாண்மை பல வழிகளில் துணைபுரிகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேளாண்மை என்பது ஒர் அடிப்படைத்தொழிலாகும்.

வேளாண்மையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது என்றே சொல்லலாம். நமது நாகரிகத்தின் அஸ்திவாரம் விவசாயிகள்தான். அவர்கள்தான் நமக்கு எல்லா உணவையும் வழங்குகிறார்கள். இதன் விளைவாக, விவசாயிகள் முழு நாட்டின் மக்களையும் ஆதரிக்கிறார்கள். அது வளரும் நாடாக இருந்தாலும் சரி, வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி. அவர்களால் தான் நாம் இந்த பூமியில் இருக்கிறோம்.

விவசாயிகளின் முக்கிய பங்கு

எனவே விவசாயிகள் இந்த பூமியில் மிக முக்கியமான நபர்கள். அவற்றின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கை முறை இல்லை. நமது சமூகத்தில் விவசாயிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எங்களுக்கு உணவு வழங்குவது அவர்களின் பொறுப்பாகும். ஒவ்வொருவருக்கும் உயிர்வாழ தகுந்த ஊட்டச்சத்து தேவைப்படுவதால் அவை நாகரிகத்தில் இன்றியமையாதவை.

விவசாயிகள் விளைவிக்கும் பல வகையான பயிர்கள் உள்ளன. அவை அனைத்தும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக அனைத்து நாடுகளும் தானியங்களும், காய்கறிகளும் அதிகமாக வேண்டும் என செயற்கை உரங்களை பயன்படுத்தி விரைவான விளைச்சலை பெற ஆரம்பித்து விட்டன. இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.

பசுமை புரட்சி

ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றன. இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது. நம்முடைய மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்று.

இயற்கை வேளாண்மையை விவசாயத்தில் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது, மண்ணின் தன்மை சிதைவடையாமல் இருக்க உதவுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் இயற்கை வேளாண்மை நாட்டில் வளர வேண்டும் என்று தமிழக அரசு 1966-ம் ஆண்டு பசுமைப்புரட்சியை கொண்டு வந்தது. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேளாண்மையில் நவீனம் புகுத்தப்பட்டுள்ளது. நடவு முதல் அறுவடை வரை எந்திரமயமாக மாறிவிட்டது.

வேளாண் கண்காட்சி

இந்தநிலையில் வேளாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருவதுடன், வேளாண்மையில் உள்ள நவீன மயமாக்கல் குறித்தும், விளைவித்த பொருளை எப்படி மதிப்பு கூட்டப்பட்டு விற்க வேண்டும் என்பது குறித்தும் மாநில அளவில் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.


Next Story