அரியலூர்: பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் பலி


அரியலூர்: பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் பலி
x
தினத்தந்தி 9 Oct 2023 10:36 AM IST (Updated: 9 Oct 2023 10:49 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஒருவர் பலியானார்.

அரியலூர்,

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரித்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து ஏற்பட்டு அதிக அளவிலான பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருப்பதால், தீயணைப்புத் துறையினரால் உடனடியாக அருகில் சென்று தீயை அணைக்க முடியவில்லை. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.


Next Story