மேம்பால பணிகள் குறித்து விசாரணை கமிட்டி அமைக்கப்படும்
ஜி.என். மில்ஸ், பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் குறித்து விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் தெரிவித்தார்.
ஜி.என். மில்ஸ், பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் குறித்து விசாரணை கமிட்டி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு உறுப்பி னர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பள்ளபாளையம் அணைக்கட்டு புனரமைக்கப்பட்டது.
2019-20-ம் ஆண்டு அமரா வதி அணையில் உள்ள பிரதான கால்வாய்கள், 18 அணைக் கட்டுகள் சேதமடைந்தன.
இதற்காக நபார்டு வங்கி உதவியுடன் ரூ.19 கோடியே 48 லட்சம் நிதி பெறப்பட்டது.
இந்த நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என தணிக்கை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கோவையில் ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம்.
விசாரணை கமிட்டி
அதேபோன்று கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என். மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலங்கள், ஏறக்குறைய 4 ஆண்டுகளாக தொழில்நுட்ப நிதி, நிர்வாக நிதி கொடுத்த பிறகும், சரியான மண் பரிசோதனை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது என தணிக்கை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எதற்காக அரசு பணம் விரையம் ஆக்கப்பட்டது என்பதை பற்றி நாங்கள் ஆய்வு செய்து இருக்கிறோம்.
முடிந்தால் இதற்கு எங்கள் குழுவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி.யிடமும் புகார் தெரிவிக்க உள்ளோம்.
கடன் குறைப்பு
2021-ம் ஆண்டு ஏற்கனவே நிலுவையில் உள்ள ரூ.540 கோடி கடனில் மாநகராட்சி ரூ.240 கோடி கடனாக குறைத்து இருக் கிறது. இது பாராட்டுக்கூடியது. வரி வசூலிலும் கோவை மாநக ராட்சி நிர்வாகம் சாதனை படைத்து உள்ளது.
இந்த ஆய்வுகளின் மூலம் 2019-20 காலகட்டத்தில் கால்வாய்கள் திட்டம், பாசன திட்டம் போன்றவைகள் சரியான முறையில் கையாளவில்லை.
இது தொடர்பாக விசாரித்து துறையை சார்ந்த செயலாளர்களை சென்னையில் அழைத்து விசாரிக்க உள்ளோம். ஆனாலும் தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களை கோவைக்கு செயல்படுவதில் எந்த சிக்கலும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளலூர் பஸ் நிலையம்
கோவை வெள்ளலூர் பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பொதுக் கணக்கு குழு உறுப்பினர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறுகையில்,
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அப்புறப்படுத்தாமல் பஸ் நிலையம் அமைத்தால் சிரமம் ஏற்படும். குப்பைகளை அகற்றிவிட்டு பின்பு இதுகுறித்து பேசுவோம், என்றார்.
கூட்டத்தில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், சரஸ்வதி, நத்தம் விஸ்வநாதன், அம்மன் கே.அர்ச்சுனன், சட்டப்பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், வருவாய் அதிகாரி ஷர்மிளா, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.