சிவகாசி: கற்காலத்தில் மனிதர்கள் கோடாரியாக பயன்படுத்திய பொருள் கண்டுபிடிப்பு
சிவகாசி அருகே நடக்கும் அகழாய்வு பணியில் ஏராளமான பொருட்கள் கிடைத்த வருகின்றன.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வின் மூலம் பண்டைய கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்து வருகிறது.12 வது அகழாய்வு குழியில் தொடர்ந்து ஏராளமான பொருட்கள் கிடைத்த வருகின்றன.
அதில் இன்று சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தண்ணீர் அருந்துவதற்காக பயன்படுத்தப்பட்ட குடுவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கற்காலத்தில் மனிதர்கள் கோடாரியாக பயன்படுத்திய கற்கால பொருட்கள் பல கண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடக்கும் அகழாய்வு பணியில் இதுவரை 2075 அரிய பொருட்கள் கிடைக்க பெற்று வருகின்றன.
இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாகவும், மிருகங்களை வேட்டையாடுவதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
Related Tags :
Next Story