திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த முதியவரால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த முதியவரால் பரபரப்பு
x

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரை சேர்ந்த தமிழரசன் (வயது 65) மனு கொடுத்தார். மனுவை வாங்கிய அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த மனுவில், நான் பெருவளப்பூர் கிராமத்தில் வசிக்கிறேன். 20 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தெய்வங்களுடன் நான் பேசிவருகிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன் என்னுடன் கனவில் பேசிய தெய்வங்கள், நீதான் அடுத்த ஜனாதிபதி ஆகவேண்டும். இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி ஒரு ஆண் தான் ஆக வேண்டும். நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்று என்னிடம் தெய்வங்கள் எல்லாம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். இதை ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களுக்கு அனுப்ப வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து கலெக்டர், நான் மனுவை அனுப்புகிறேன் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். முன்னதாக மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் அந்த முதியவர் கொண்டு வந்த மனுவை வாங்கி படித்த அதிகாரிகள், இவ்வளவு மக்கள் வந்து கூடியிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட நகைச்சுவை மன்னர்களும் சில சமயங்களில் வந்து விடுகிறார்கள் என்று சிரித்தபடி உங்கள், கோரிக்கையை சாமி நிறைவேற்றுவார் என்று திருப்பி கொடுத்து அனுப்பி வைத்தனர்.


Next Story