மாடு முட்டியதில் முதியவர் சாவு
மாடு முட்டியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை திருநகரம் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). இவர் மருந்து வாங்குவதற்காக விருதுநகர் சாலையில் உள்ள கடைக்கு வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சந்திரசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story