கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
x

திருப்பத்தூர் அருகே ஆட்டை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பூங்குளம்புதூரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65). இவர் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள தோப்பில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆடு ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. இதை மீட்பதற்காக தேவராஜ் முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story