கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி


கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
x

மூலைக்கரைப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள் நகரை சேர்ந்தவர் புதியவன் (வயது 75). இவரது மனைவி ராணி (69). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புதியவன் தற்போது மனைவியினுடைய தாயார் வீடு அமைந்துள்ள அரசனார்குளம் காந்திநகர் காலனியில் வசித்து வருகிறார். வழக்கம்போல அதிகாலையில் எழுந்த புதியவன் வீட்டுக்கு அருகே நடந்து செல்லும்போது அங்கு சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்துள்ளார். நீண்டநேரம் ஆகியும் புதியவன் வீட்டுக்கு வராததை கண்டு வீட்டில் உள்ளவர்கள் பல இடங்களில் தேடினார்கள். பின்னர் அவர் கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இருந்து புதியவன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து அவருடைய மகன் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story