விபத்தில் முதியவர் பலி


விபத்தில் முதியவர் பலி
x

காரைக்குடியில் நடந்த விபத்தில் முதியவர் பலியானார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி டி.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். (வயது 70) இவர் பழைய பஸ் நிலையம் அருகே எஸ்.டி.டி. பூத் வைத்துள்ளார். சம்பவத்தின்போது. பாலசுப்பிரமணியன் வீட்டிலிருந்து மொபட்டில் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள எஸ்.டி.டி. பூத் நோக்கி சென்று கொண்டிருந்தார். 100 அடி சாலையில் சென்ற போது எதிரே தனியார் வங்கி ஊழியர் திலீப் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார் எதிர்பாராதவிதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த பாலசுப்பிரமணியன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story