கழிவுநீர் கால்வாயில் விழுந்த முதியவர்


கழிவுநீர் கால்வாயில் விழுந்த முதியவர்
x

மொபட்டில் சென்றபோது முதியவர் ஒருவர் கழிவுநீர் கால்வாயில் விழுந்தார்.

வேலூர்

வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் இருந்து காட்பாடி சாலையில் உள்ள தபால் நிலையம் வரை இடைப்பட்ட பகுதியில் பல தெருக்கள் உள்ளது. இந்த சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. தூர்ந்து போய் காணப்படும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் மூடப்படாத நிலையில் காணப்படுகிறது.

அந்த சாலை குறுகிய சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த சாலையில் செல்லும் நிலை உள்ளது. இந்தநிலையில் நேற்று அந்த வழியாக மொபட்டில் சென்ற முதியவர் ஒருவர் திடீரென கழிவுநீர் கால்வாயில் வாகனத்துடன் விழுந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் கால்வாய் அமைக்கப்பட வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story