மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் வேன் மோதி பலி
மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் வேன் மோதி பலியானார்.
கலசபாக்கம்
மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் வேன் மோதி பலியானார்.
கலசபாக்கத்தை அடுத்த மட்டவெட்டு கிராமம் கோணக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் வீட்டில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கீழ்பாலூர் கூட்ரோட்டில் இருந்து போளூர்-செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது செங்கத்திலிருந்து போளூர் நோக்கிச் சென்ற வேன் மோதியது. இதில் முருகேசன் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசன் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.