வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முதியவர் ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஆலத்தூர் தாலுகா நக்கசேலத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 64) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள்-19 மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story