குடிபோதையில் தகராறு செய்த முதியவரை கீழே தள்ளி விட்டதில் சுவரில் மோதி சாவு
கொரடாச்சேரி அருகே குடிபோதையில் தகராறு செய்த முதியவரை கீேழ தள்ளி விட்டதில் சுவரில் மோதி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மகனை கைது செய்தனர்.
கொரடாச்சேரி அருகே குடிபோதையில் தகராறு செய்த முதியவரை கீேழ தள்ளி விட்டதில் சுவரில் மோதி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மகனை கைது செய்தனர்.
குடிபோதையில் தகராறு
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் அத்திக்கடை அண்ணா தெருவை சேர்ந்தவர் அல்லா பிச்சை(வயது 60). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் அருகில் குடியிருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை அல்லா பிச்சையின் மகன் அசன் அலி(37) தட்டி கேட்டுள்ளார். இதில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட சண்டையில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டுள்ளனர்.
முதியவர் சாவு
இதில் நிலை தடுமாறிய அல்லா பிச்சை சுவரில் மோதியுள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கிய அல்லா பிச்சையை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அல்லா பிச்சை பரிதாபமாக இறந்தார்.
மகன் கைது
இது தொடர்பாக அல்லா பிச்சையின் மனைவி ஹபிப்நிஷா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து அசன் அலியை கைது செய்தார்.