மது விற்ற முதியவர் கைது


மது விற்ற முதியவர் கைது
x

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 62) என்பவரது வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்த போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.


Next Story