நடைப்பயிற்சி சென்ற முதியவர் திடீர் சாவு
மானூர் அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவர் திடீரென இறந்தார்.
திருநெல்வேலி
மானூர்:
நெல்லை அருகே அபிஷேகப்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 78). கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது மகள் வீட்டில் தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் மானூர் அருகே சேதுராயன்புதூர் பகுதியில் அவர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவரது மகன் தில்லைசிதம்பரம் (46) என்பவர் மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி, இறந்த கதிர்வேலின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story