தீயில் கருகி மூதாட்டி சாவு
தீயில் கருகி மூதாட்டி சாவு
சிவகாசி
திருத்தங்கல் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லச்சாமி மனைவி சிவபாக்கியம் (வயது 82). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். சிவபாக்கியம் பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரை உறவினர்கள் கவனித்து வந்தனர். இந்த நிலையில். சிவபாக்கியம் படுத்து இருந்த கட்டிலின் அருகில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்துவிட்டு தூங்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கொசுவர்த்தி சுருள் தீ கட்டிலில் இருந்த துணிகளில் பிடித்து மூதாட்டியின் மீதும் தீ பரவியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் மூதாட்டி சிவபாக்கியம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.