தொடர்ந்து நடைபெற்று வரும் மோட்டார் சைக்கிள் திருட்டு


தொடர்ந்து நடைபெற்று வரும் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் வாரச்சந்தையில் மோட்டார் சைக்கிள் திருட்டு தொடா்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

வாரச்சந்தை

தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு காலையில் ஆடு மற்றும் மாடுகள் விற்பனையும், மாலையில் காய்கறிகள் விற்பனையும் நடைபெறுகின்றன.

இங்கு தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர் தங்களது மோட்டார் சைக்கிளை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிகொண்டு வருவதற்குள் மர்ம நபர்கள் அவர்களின் மோட்டார் சைக்கிளை திருடிசெல்லும் சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது.

2 மோட்டர் சைக்கிள்கள் திருட்டு

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வாரச்சந்தைக்கு வந்திருந்த தியாகதுருகம் அருகே பிரதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மற்றும் விளக்கூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த பாவாடை ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

அதேபோல் கூட்டநெரிசலை பயன்படுத்தி காய்கறி வாங்க வந்த தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமம் ஆனந்தராசு, புக்குளம் மாயவன், மடம் முத்துவேல், செம்பியன்மாதேவி அலெக்ஸ்பாண்டியன், வாழவந்தான்குப்பம் கோவிந்தராஜ், பல்லகச்சேரி செந்தில், சித்தலூர் சுபாஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். ஒரே நாளில் 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போன சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வாரசந்தையின்போது போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story