திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வந்தது


திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வந்தது
x

திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டுக்கு வந்தது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திட்டக்குடி ஊராட்சியில் பட்டுக்கோட்டை பகுதிகளில் விளையக்கூடிய நெல்மணிகளை சேமித்து வைப்பதற்காக பத்தாயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு குடோனும், 1500 டன் கொள்ளளவு கொண்ட 3 குடோன்களும் என மொத்தம் 14 ஆயிரத்து 500 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது. ஆனால் பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய நெல்மணிகளை சேமித்து வைக்க இட பற்றாக்குறை இருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.5.60 கோடி செலவில் புதிய திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்காக அண்ணாதுரை எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து மொத்தம் 6ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 5 குடோன்கள் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இந்த நெல் சேமிப்பு கிடங்கை கடந்த மாதம் 25-ந் தேதி முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இந்த நெல் சேமிப்பு கிடங்கு பயன்பாட்டிற்கு வந்தது. பட்டுக்கோட்டை, மதுக்கூர், அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரக்கூடிய நெல் மணிகள் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் நெல்மணிகள் தார்ப்பாய்கள் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 20 ஆயிரத்து 500 டன் நெல்மணிகள் திட்டக்குடி ஊராட்சி திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


Next Story