மாதகடப்பா மலை பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்படும்


மாதகடப்பா மலை பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்படும்
x

வாணியம்பாடி அருகே மாதகடப்பா மலை பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறினார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே மாதகடப்பா மலை பகுதியில் புறகாவல் நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கண்காணிப்பு கேமரா

ஆலங்காயம் அருகே துரிஞ்சிகுப்பம் பகுதியில் கடந்த 30-ந் தேதி வனப்பகுதியில் மங்கம்மாள் என்ற பெண்ணை அடித்து கொலை செய்த வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்கள்.

கள்ளச்சாராயம் மற்றும் அரிசி கடத்தலை தடுக்க தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டப்பட்டு உள்ளது. வாணியம்பாடி நகரப் பகுதியிலும், ஆம்பூர் நகரப் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளதை சரி செய்தும், அரசு உதவியுடன் மாவட்ட எல்லை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புறகாவல் நிலையம்

மேலும் வாணியம்பாடி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், ஆம்பூர் பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளி, கல்லூரி நேரங்களில் தேவையான பாதுகாப்புகளை மாணவர்களுக்காக செய்து தரப்படும்.

மேலும் தமிழக -ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள மாதகடப்பா மலை பகுதியில் வனத்துறை அனுமதி பெற்ற பின்னர், 2 வார காலத்தில் புறகாவல் நிலையம் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உடன் இருந்தார்.


Next Story