தஞ்சையில் பராமரிப்பின்றி கிடந்த அரசு கட்டிட வளாகம் சுத்தம் செய்யப்பட்டது


தஞ்சையில் பராமரிப்பின்றி கிடந்த அரசு கட்டிட வளாகம் சுத்தம் செய்யப்பட்டது
x

தஞ்சையில் பராமரிப்பின்றி கிடந்த அரசு கட்டிட வளாகம் சுத்தம் செய்யப்பட்டது

தஞ்சாவூர்

தினத்தந்தி" செய்தி எதிரொலியால் தஞ்சையில் பராமரிப்பின்றி கிடந்த அரசு கட்டிட வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

கோர்ட்டு கட்டிடம்

தஞ்சை அரசு சுற்றுலா மாளிகை பின்புறம் கோர்ட்டு செயல்பட்டு வந்தது.இந்த கோர்ட்டு அருகே குடியிருப்புகள், அரசு அலுவலகம், மாணவிகள் விடுதி, மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்பட பல அமைந்துள்ளன. இதனால் அந்த பகுதியில் எப்போதும் ஆள்நடமாட்டம் இருந்து கொண்டே இருந்து வந்தது. தற்போது இந்த கோர்ட்டு புதிதாக தஞ்சை மணிமண்டபம் அருகே கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

இதன்காரணமாக கோர்ட்டு செயல்பட்டு வந்த கட்டிடம் பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி அந்த கட்டிடம் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிவந்தது. இவர்கள் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் டம்ளர்கள், பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள், மதுபாட்டில்கள் அதிகளவில் குவிந்து கிடந்தது.

பொதுமக்கள் அச்சம்

மேலும், மதுப்பிரியர்கள் அதிகளவில் வந்து செல்வதால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இதன்காரணமாக அங்கு பொதுமக்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது.

அதுமட்டுமின்றி அந்த பகுதியில் சிலம்பம், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட வரும் சிறுவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து "தினத்தந்தி"யில் படத்துடன் செய்தி வெளியானது.

"தினத்தந்தி"செய்தி எதிரொலி

இந்த நிலையில் "தினத்தந்தி" செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி அந்த பகுதியில் கிடந்த மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் முழுவதும் அகற்றப்பட்டது.

கோர்ட்டு கட்டிடத்தை சுற்றி வளர்ந்திருந்த செடி, கொடிகள் வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


Next Story