மாசாணியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 25-ந் தேதி நடக்கிறது


மாசாணியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 25-ந் தேதி நடக்கிறது
x

குண்டம் திருவிழாவை யொட்டி வருகிற 27-ந் தேதி வரை அம்மனுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலையில் புகழ் பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையை யொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த விழா 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான திருவிழா தை அமாவாசை தினத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மங்கள வாத்தியங்கள் முழங்க 85 அடி நீள மூங்கில் கொடி மரத்தில் சிம்ம வாகனம் பொறித்த மஞ்சள் நிற கொடி கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக மாசாணியம்மன் கோவிலுக்கு கொடி மரம் கொண்டு வரப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

குண்டம் திருவிழாவை யொட்டி வருகிற 27-ந் தேதி வரை அம்மனுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. 25-ந் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.


Next Story