ஆனந்த ஆசிரம சத்சங் சமிதி கூட்டம்
பாளையங்கோட்டையில் ஆனந்த ஆசிரம சத்சங் சமிதி கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டையில் ஆனந்த ஆசிரம நெல்லை சத்சங்சமிதியின் தென்காசி, நெல்லை மாவட்டங்களின் கூட்டு செயற்குழு கூட்டம் நடந்தது. கருடப்ப அய்யங்கார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமோகன் வரவேற்றார். முருகேசன் கடவுள் வாழ்த்து பாடினார். சத்சங் பிரதிநிதி பட்டாதாசர் கிருஷ்ணமூர்த்தி ராமநாம சங்கீர்த்தனம் நடத்தினார். நல்லாசிரியர் வெங்கடாசலபதி மாதாஜி கிருஷ்ணம்மாளின் பொன்மொழிகளை பற்றி பேசினார். சாய்ராம் சீனிவாசன் சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார்.
கூட்டத்தில், தென்காசி இலஞ்சியில் ஓம்பிரவண ஆசிரமத்தில் நடைபெறும் நவகோடிராமநாம வைபவத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story