ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 6 July 2023 7:45 PM GMT (Updated: 6 July 2023 7:46 PM GMT)

கொடைக்கானலில் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

திண்டுக்கல்

கொடைக்கானலில் ஆனந்தகிரி பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் யாக பூஜைகள் நேற்று காலை தொடங்கியது. அதில் காலை 8 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் மாலை 5 மணிக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் 2-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன. நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் மற்றும் பல்வேறு பரிகார சாமிகளுக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.


Next Story