அனந்தபுரி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்கள் மாற்றம் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


அனந்தபுரி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்கள் மாற்றம் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

அனந்தபுரி, ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்கள் மாற்றம் -தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

*சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே வண்டி எண் - 16723 என்று இயங்கி கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற ஜனவரி 6-ந்தேதி முதல் 16823 என்ற எண்ணில் மாற்றி இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் இடையே 16724 என்ற எண்ணில் இயங்கி கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற ஜனவரி 6-ந்தேதி முதல் 16824 என்ற எண்ணில் மாற்றி இயக்கப்படும்.

*எழும்பூர்-ராமேசுவரம் இடையே 16851 என்ற எண்ணில் இயங்கி கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற ஜனவரி 6-ந்தேதி முதல் 16751 என்ற எண்ணில் மாற்றி இயங்கப்படும். மறுமார்க்கமாக ராமேசுவரம்-எழும்பூர் இடையே 16852 என்ற எண்ணில் இயங்கி கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில், வருகிற ஜனவரி 6-ந்தேதி முதல் 16752 என்ற எண்ணில் மாற்றி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story