ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவிற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா (வயது 46) காலமானார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் ஆவார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.
அவரின் உடல் தற்போது ஈரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகிச இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.