மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா


மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா
x
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஆடித்திருவிழா

எடப்பாடி பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் மேட்டு மாரியம்மன், ஆலச்சம்பாளையம் சக்தி மாரியம்மன், பழைய எடப்பாடி மாரியம்மன் கோவில், வெள்ளாண்டி வலசு பழைய பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்கள், க.புதூர் ஓம் காளியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவில் சாமி திருவீதி உலா, அம்மன் அழைப்பு, தீர்த்தக்குட ஊர்வலம். முளைப்பாரி ஊர்வலம், ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்டவை நடந்தன. விழாவில் நேற்று நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேட்டு மாரியம்மன் கோவில் முன்பு திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பொங்கல் வைத்து வழிபாடு

தொடர்ந்து பக்தர்கள் அலகுகுத்தி கொண்டு தீமிதித்தனர். அம்மன் கோவில்களில் விரதம் இருந்த பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். சின்னமணலி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பூசாரி கைகளால் சவுக்கடி பெற்று வழிபாடு நடத்தினர்.


Next Story