மேலும் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் சரண்


மேலும் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேலும் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் சரண்

கோயம்புத்தூர்

கோவை

கோவை ரவுடியை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தார்.

ரவுடி சுட்டுக்கொலை

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 32). இவர் மீது கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே அவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து டிரைவராக பணி புரிந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி நவ இந்தியா-ஆவாரம்பாளயைம் சாலையில் ஒரு இளநீர் கடை அருகே நின்று கொண்டிருந்த சத்திய பாண்டியை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் உயிர் தப்பிக்க சத்திய பாண்டி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்தார். இருப்பினும் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டதுடன், அரிவாளால் சரமாறியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

மேலும் ஒருவர் சரண்

தப்பி ஓடிய கும்பலை பிடிக்க கோவை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் அந்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த கும்பலை சேர்ந்த சஞ்சய் குமார் (23), சல்பர்கான் (22), காஜா உசேன் (24), ஆல்வின் (37) ஆகியோர் அரக்கோணம் கோர்ட்டில் கடந்த வாரம் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் கோவை அழைத்து வரப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இந்த கொலையில் தேடப்பட்டு வந்த கோவையை சேர்ந்த முக்கிய நபரான சஞ்சய் ராஜா (34) என்பவர் சென்னை எக்மோர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். இவர் தான் துப்பாக்கியால் சத்திய பாண்டியை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

அடையாள அணிவகுப்பு

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டிருந்தசஞ்சய் குமார், சல்பர்கான், காஜா உசேன், ஆல்வின் ஆகிய 4 பேரும் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள ஜே.எம்.-3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேரையும் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக்க கோரி ஜே.எம்.-3 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.



Next Story