ஆண்டாள் திருக்கல்யாணம்


ஆண்டாள் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தில்லைகோவிந்தராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பெருமாள், ஆண்டாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று உள் பிரகாரகத்தை வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினர். அப்போது அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினர். பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார்.


Next Story