ஆந்திர முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆந்திர முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை ஆசிரம விடுதியில் ஆந்திர முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆசிரம விடுதியில் ஆந்திர முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடரத்தினம் (வயது 68). இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தனியார் ஆசிரமத்தில் வேலை செய்து வந்து உள்ளார்.

உடல் நல குறைப்பாட்டினால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் ஆசிரமத்தின் விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அறைக்குள் சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்து உள்ளர். அப்போது வெங்கட ரத்தினம் தூக்கில் உயிரிழந்த நிலையில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வெங்கடரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.


Next Story