ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆந்திரா ராகவேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவனத்திற்கு வஸ்திர மரியாதை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆந்திரா ராகவேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவனத்திற்கு வஸ்திர மரியாதை
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆந்திரா ராகவேந்திர சுவாமிகள் மூல பிருந்தாவனத்திற்கு வஸ்திர மரியாதை அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி

ஸ்ரீரங்கம்,ஆக.11-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கும், திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் உறவு மேம்பட தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் ஆந்திர மாநிலத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திர மாநிலம் மந்தராலயம் பகுதியில் உள்ள ராகவேந்திர சுவாமிகளின் மூல பிருந்தாவனத்திற்கு நேற்று காலை வஸ்திரம் மற்றும் பகுமானம் எனப்படும் சீர்பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினர் அனுப்பி வைத்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) அங்கு சென்றடையும்.


Next Story