ஆந்திர மாநில அரசு பஸ் மீது கல்வீச்சு
நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மாநில அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை திருப்பத்தூர் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் வரை பயணிகளை ஏற்றிக்கொண்டு நாட்டறம்பள்ளி வழியாக ஆந்திர மாநில அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான கொத்து காந்திநகர் பகுதியில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து மர்ம நபர்கள் ஆந்திர அரசு பஸ்சில் பின்பக்கம் கண்ணாடி மீது கல் வீசினர்.
இதில் பஸ் கண்ணாடி சேதமடைந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.