ரத்த சோகை ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


ரத்த சோகை ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

ரத்த சோகை ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்

தோகைமலையில் ஒருங்கிணைந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ரத்த சோதனை ஓழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார். தோகைமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story