அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா
அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது.
அரியலூர்
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கோடாலி கருப்பூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு சம்வத்சர அபிஷேகம் மற்றும் 39-ம் ஆண்டு லட்சார்ச்சனை ஆகியவை நடைபெற்றன. இதனை முன்னிட்டு கடம் ஆவாகனம் செய்யப்பட்டு சிறப்பு வேள்வி நடைபெற்றது. பின்னர் புனித நீரை கொண்டு அம்பாளுக்கு சம்வத்சர அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கல ஆரத்தி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 39-ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடைபெற்றது. கிராம மக்கள் வீடுகள் தோறும் அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு விடையாற்றி வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story