அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும்


அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Oct 2023 6:45 PM GMT (Updated: 15 Oct 2023 6:46 PM GMT)

இடவசதி இல்லாததால் கோவிலில் வைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. எனவே அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூர்:

இடவசதி இல்லாததால் கோவிலில் வைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. எனவே அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்கன்வாடி மைய கட்டிடம்

கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பைங்காட்டூர் ஊராட்சி வாலிஓடை கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடி மையம் தொடங்கிய காலத்தில் இருந்து கட்டிடவசதி இல்லாமல், தற்போது அங்குள்ள பிள்ளையார் கோவிலில் நடத்தப்படுகிறது. ஆரம்பகாலத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மையத்துக்கு வந்து சென்றனர்.

விரைந்து முடிக்க வேண்டும்

கட்டிட வசதி இல்லாததால் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதில்லை. உணவு மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்புவது குறைந்துவிட்டது. தற்போது 10 குழந்தைகள் மட்டுமே வந்து செல்கின்றனர். அதைதொடர்ந்து இந்த அங்கன்வாடி மையத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாக முடித்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story